தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கிருஷ்ணா நதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 8 டி.எம்.சியை எட்டியதால் நிறுத்தம் - கிருஷ்ணா நதி

சென்னை: சென்னை மாநகரின் தண்ணீர் தேவைக்காக கிருஷ்ணா நதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 8 டி.எம்.சியை எட்டியதால் நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணா நதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 8 டி.எம்.டி யை எட்டியதால் நிறுத்தம்
கிருஷ்ணா நதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 8 டி.எம்.டி யை எட்டியதால் நிறுத்தம்

By

Published : Jun 23, 2020, 6:40 PM IST

சென்னையில் தண்ணீர் தேவைக்காக ஒவ்வொரு வருடமும் 8 டி.எம்.சி தண்ணீர் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் ஒப்பந்தப்படி கிருஷ்ணா அணையிலிருந்து திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் கோரிக்கைப்படி 68 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையிலிருந்து கடந்த மாதம் 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 8.50 டி.எம்.சி தண்ணீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. இதனையடுத்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறுகையில், "ஒப்பந்தப்படி தேவையான தண்ணீர் ஆந்திர அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நமக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்துள்ளது என்பதால் இந்த ஆண்டு ஆந்திர அரசிடம் மேலும் தண்ணீர் வேண்டும் என்கிற கோரிக்கை வைப்பதற்கு அவசியம் ஏற்பட வாய்ப்பில்லை" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details