திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து சிறப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ், இன்று (ஜூன் 27) மாவட்ட ஆட்சியர், மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை: கரோனா சிறப்பு அலுவலர் அபூர்வா பங்கேற்பு - Advisory meeting
திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்களுடன் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் அபூர்வா, இன்று (ஜூன் 27) ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நிலவரம் குறித்தும், குணமடைந்தவர்கள் விவரம் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் சிறப்பு அலுவலர் அபூர்வா கேட்டறிந்தார். பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுடன் தொலைபேசி மூலம் அபூர்வா உரையாடினார்.
அப்போது, பெண் நோயாளி ஒருவர், தனக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகும் வீட்டிற்கு அனுப்பாமல் உள்ளதால், மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று முறையிட்டார். அதற்கு சிறப்பு அலுவலர் அபூர்வா, “எங்களுக்கு உங்களை அடைத்து வைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை, சோதனை முடிவின் அடிப்படையில் நிச்சயம் வீட்டிற்கு அனுப்பி விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.