தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 2:31 PM IST

ETV Bharat / briefs

ஊராட்சி மன்றத் தலைவர் அனுமதி இல்லாமல் அதிமுக பிரமுகர்கள் குளத்தில் மண் எடுப்பதாகப் புகார்!

திருவாரூர்: மன்னார்குடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி இல்லாமல், அதிமுக பிரமுகர்கள் குளத்தில் மண் எடுப்பதாகப் புகார் வந்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி இல்லாமல் அதிமுக பிரமுகர்கள் குளத்தில் மண் எடுப்பதாக குற்றச்சாட்டு
ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி இல்லாமல் அதிமுக பிரமுகர்கள் குளத்தில் மண் எடுப்பதாக குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காரிக்கோட்டை, பைங்காநாடு உள்ளிட்ட இரு கிராமங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கிராமங்களில் அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை, பைங்காநாடு கிராமங்களில் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி பெறாமல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளின் துணையுடன் குளத்தில் மண் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

காரிக்கோட்டை, பைங்காநாடு கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக பதவி வகிப்பதால், அவரது அனுமதியைப் பெறாமல் குளத்தில் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிமுகவினருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே பிரச்னை எழும் சூழல் நிலவியது.

இதனையறிந்த மன்னார்குடி காவல் துறையினர் மற்றும் மன்னார்குடி பொதுப்பணித்துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று, சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். குளத்து மண்ணை எடுத்து கரைகளை உயர்த்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி குளத்தில் மண் எடுக்கும் அதிமுகவினரைக் கண்டித்து மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details