பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப திருச்சி மண்டல செயலாளர் வினு பாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் - அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய மண்டல செயலாளர் வினு பாலன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு தகவல் தொழில் நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை!