இது தொடர்பாக அஇஅதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதுரை மாநகர் மாவட்டம் மத்திய தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு அஇஅதிமுக தலைமைக்கழகம் இரங்கல்! - அஇஅதிமுக தலைமைக் கழகம் இரங்கல்
சென்னை : மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சுந்தரராஜன் மறைவிற்கு அஇஅதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு அஇஅதிமுக தலைமைக்கழகம் இரங்கல்! மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு அஇஅதிமுக தலைமைக்கழகம் இரங்கல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:49:43:1594142383-tn-che-11-admkcondolences-7209106-07072020222944-0707f-1594141184-1030.jpg)
மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு அஇஅதிமுக தலைமைக்கழகம் இரங்கல்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற அன்புச் சகோதரர் ஆர். சுந்தர்ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.