தூத்துக்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜம்மாள் சாம்ராஜ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
'ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவர் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள்' - அதிமுக இரங்கல் - அதிமுக இரங்கல்
சென்னை: தூத்துக்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜம்மாள் மறைவிற்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரங்கல்
இந்தச் செய்தியைக் கேட்டு நாங்கள் மிகுந்த வருத்தமுற்றோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற அன்புச் சகோதரி ராஜம்மாள் சாம்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அவரது ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.