தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பியாக கூடுதல் பொறுப்பேற்றார் ஏ.கே.விஸ்வநாதன்! - முன்னாள் சென்னை கமிஷனர்

சென்னை : அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்துவரும் ஏ.கே.விஸ்வநாதனுக்கு மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பியாக கூடுதல் பொறுப்பேற்றார் ஏ.கே.விஸ்வநாதன்!
மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பியாக கூடுதல் பொறுப்பேற்றார் ஏ.கே.விஸ்வநாதன்!

By

Published : Jul 8, 2020, 6:06 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள ஆணையில், " சென்னை காவல் ஆணையராக கடமையாற்றி வந்த ஏ.கே.விஸ்வநாதன், அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குநராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ் அலுவலரான ஏ.கே.விஸ்வநாதன் சென்னை காவல் ஆணையராக பதவி வகித்தகாலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குற்றங்களை தடுக்க தொழில் நுட்ப உதவிகளைக் கைக்கொண்டு, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். இதற்காக நாட்டின் சிறந்த காவல்துறை ஆணையர் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details