நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் 19 வயதில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஆனால் அந்தத் திருமணமும் 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நேற்று சமூக வலைதளங்களில் பத்திரிகை ஒன்று வெளியானது. அதில் மணமகனின் பெயர் பீட்டர் பால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நெட்டிசன்கள், அது உண்மை தானா என்று தெரியாமல் குழம்பினர்.
இந்நிலையில் இது குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, எனக்கு திருமணம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் தற்போது 40 வயதை நெருங்குகிறேன். இந்த நான்கு மாத லாக்டவுனில் என் வாழ்க்கை குறித்து நிறைய தெளிவு கிடைத்துள்ளது. என் மனதிற்கு பிடித்த ஒருவர் கிடைத்துள்ளார்.