தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருக்கும் பிரபல நடிகை! - sushant singh rajput

நடிகை பாயல் கோஷ் ஐந்து ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Payal Ghosh
Payal Ghosh

By

Published : Jun 15, 2020, 5:46 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து நான் மன அழுத்தத்தில் உள்ளேன். இதற்காக மருத்துவர்களை அணுகி முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன்.

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் உடனே மருத்துவமனைக்கு சென்றுவிடுவேன்.

எனது குடும்பமும், நண்பர்களும் இந்த செயலைக் குறை சொல்வதில்லை" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details