தெலுங்கில் 'ஓகா மனசு' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஹாரிகா. இதையடுத்து அவர் தமிழில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணம் செய்துகொள்ளும் நபரை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி பட நாயகி! - Latest cinema news
நடிகை நிஹாரிகா, தான் திருமணம் செய்துகொள்ளும் நபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
![திருமணம் செய்துகொள்ளும் நபரை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி பட நாயகி! niharika](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:14:37:1592574277-560167-1906newsroom-1592574226-713.jpg)
niharika
இந்நிலையில் நிஹாரிகா, தான் திருமணம் செய்துகொள்ளும் நபர் குறித்து அறிவித்துள்ளார். ஐடி ஊழியரான வெங்கட சைதன்யாவை, நிஹாரிகா திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகன்தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.