தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்' - சிரஞ்சீவி சர்ஜா மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு! - Latest cinema news

நடிகை மேக்னா ராஜ் தனது கணவரின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Megna Raj
Megna Raj

By

Published : Jun 18, 2020, 3:03 PM IST

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிரஞ்சீவியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் மரணம் குறித்து அவரது மனைவி மேக்னா, சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்களைப் பற்றி வார்த்தைகளால் சொல்ல நினைக்கும்போது, வார்த்தை கிடைக்காமல் திணறுகிறேன். நீங்கள் என் கணவர் என்பதை தாண்டி எனது நண்பன், காதலன், நம்பிக்கை, என் உயிரின் ஒரு பகுதி.

ஒவ்வொரு முறையும் நான் வாசலைப் பார்க்கும் போது நீ வராமல் இருப்பது, மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. நீ என் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என்னை நீ தனியாக விட்டுச் செல்லவில்லை. நம் காதலின் அடையாளமாக, நம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறாய். இதற்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மீண்டும் இந்த உலகிற்கு உன்னை குழந்தை வாயிலாக கொண்டு வரப்போகிறேன். உன் சிரிப்பை, உன்னை கட்டியணைக்கும் அந்த நாளிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நீ என்றுமே எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரஞ்சீவி- மேக்னா

ABOUT THE AUTHOR

...view details