'பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், அவ்வப்போது தமிழ்நாடு அரசை தாக்கி பேசி வருகிறார்.
என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் - மோடியிடம் கோரிக்கை வைத்த மீரா மிதுன் - Kollywood news latest
பிரதமர் மோடியிடம் தன்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக்குமாறு நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இப்போதைய தமிழ்நாடு அரசு கரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. என்னை தமிழ்நாடு முதல்வர் ஆக்கினால், ஒரே வாரத்தில் கரோனாவை விரட்டுவேன். கிரிமினல்கள் அனைவரையும் ஒரே மாசத்தில் சிறையில் தள்ளுவேன். ஊழல் இல்லா மாநிலமாக இரண்டே மாதத்தில் தமிழ்நாட்டை மாற்றுவேன்.
தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவருமே ஊழல்வாதிகள். அதுமட்டுமின்றி நான் பிஎஸ்ஸி மைக்ரோபயாலஜியும், எம்எஸ்ஸி பயோடெக்னாலஜியும் படித்திருக்கிறேன். ஆதலால் பிரதமர் மோடி எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், என்னுடைய தாய் நாட்டை நான் காப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். மீரா மிதுனின் இப்பதிவை கண்ட நெட்டிசன்கள், அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.