தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை' - அறிவுரை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! - ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது ரசிகர் ஒருவருக்கு அறிவுரை கூறி, பதிவு வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

By

Published : Jun 12, 2020, 5:54 PM IST

தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டார். அதைக்கண்ட ரசிகர் ஒருவர், 'உங்களுக்காக நான் சாகத் தயார்' என்று கமெண்ட் செய்திருந்தார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, 'உங்களின் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால், தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை.

நான் என்றுமே உங்களுக்குத் தோழியாக இருப்பேன். இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்' என்று பதிலளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details