தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை' - விவேக் - Vivek latest movie

சென்னையில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vivek
Vivek

By

Published : Jun 16, 2020, 12:18 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றல் 33,244 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பலரும் சென்னையை கண்டு அச்சப்படுகின்றனர்.இந்நிலையில் இதுகுறித்து நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.

தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details