'தோனி' பட நாயகன் சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
50 ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்பே உயிரைவிட்ட சுஷாந்த் சிங்! - சுஷாந்த் சிங்
நடிகர் சுஷாந்த் சிங்கின் 50 ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர் இறந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு 50 நிறைவேறாத ஆசைகள் இருந்துள்ளது. அதை அவரே சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கைப்பட ஒரு ரசிகருக்கு தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்.
விமானம் இயக்க வேண்டும், ரயிலில் யூரோப் பயணம் மேற்கொள்ள வேண்டும், 100 குழந்தைகளையாவது இஸ்ரோ அல்லது நாஸாவில் நடக்கும் வொர்க்ஷாப்புகளுக்கு அனுப்ப வேண்டும், இடது கை ஆட்டக்காரராக கிரிக்கெட் விளையாட வேண்டும்,பாடம் சொல்லித் தர வேண்டும், பிரபல டென்னிஸ் வீரர் ஒருவருடன் ஒரு செட் கேம் விளையாட வேண்டும் உள்ளிட்ட ஆசைகளை குறிப்பிட்டுள்ளார்.