தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'சிவகார்த்திகேயனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' - ரியோ ராஜ் - Latest cinema news

சிவகார்த்திகேயனுக்கு என்றுமே நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்று நடிகர் ரியோ ராஜ் தெரிவித்துள்ளார்.

Rio
Rio

By

Published : Jun 15, 2020, 7:12 PM IST

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கினார்.

இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் ரியோ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான நாள். என்னை நானே பெரிய திரையில் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நாள். இப்படம் என்னை ஒரு நடிகன் ஆக்கியது, ஒரு சிறந்த இயக்குநர், தயாரிப்பாளரை கொடுத்தது.

அதையும் தாண்டி ஒரு அழகான குடும்பம் கிடைத்தது. விரைவில் இன்னொரு படம் பண்ணுவோம். சிவகார்த்திகேயனுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details