தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஈரோட்டிற்குள் இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை - எஸ்.பி. சக்தி கணேசன் எச்சரிக்கை - கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இ.பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை

ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா பாதித்த மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் எச்சரித்துள்ளார்.

ஈரோட்டிற்குள் இ.பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன்!
ஈரோட்டிற்குள் இ.பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன்!

By

Published : Jun 22, 2020, 4:28 PM IST

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக 135 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ்நாடு - கர்நாடக எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மண்டல பகுதிகளில் வாகன போக்குவரத்து உள்ளதால் 42 இடங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டல பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் எதுவும் தேவையில்லை என்பதால் அங்கிருந்து வருபவர்களும் முழுமையாக சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் கூறும் வழிமுறைகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details