தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வீட்டை காலி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டை காலி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரிய வழக்கில் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Action to vacate house canceled - High Court Madurai branch orders

By

Published : Jun 19, 2020, 9:03 PM IST

மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்த பாலமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடு, கடந்த 2012ஆம் ஆண்டு எனக்கு ஒதுக்கப்பட்டது. தற்போதுவரை அந்த வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்துவருகிறேன்.

சமீபத்தில் நான் வசித்த வீட்டில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டது. இதை சரி செய்து தருமாறு வீட்டு வசதி வாரிய அலுவலர்களிடம் முறையிட்டேன். ஆனாலும் அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. தொடர்ந்து நான் பல முறை இதுகுறித்து அவர்களிடம் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை அவர்கள் பரிசீலிக்கவில்லை.

நான் ஊடகத் துறையில் பணியாற்றியதால், வீட்டு வசதி வாரியத்தில் நடக்கும் ஊழல்களை ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தினேன். இதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என்னை பழிவாங்க திட்டமிட்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி, நான் வசித்த வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட கடிதத்தை
எனக்கு அனுப்பியிருந்தனர். அந்த கடிதம் எனக்கு கடந்த 9ஆம் தேதிதான் கிடைத்தது.

கரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் திடீரென வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டிருப்பது விதிகளுக்கு புறம்பானது. வேண்டுமென்றே அலுவலர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எந்த ஒரு குற்றச்சாட்டுமின்றி என்னை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
எனவே வீட்டை காலி செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.தேவைப்பட்டால் மனுதாரருக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details