தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'கேதார்நாத் பட ரிலீஸ் சமயத்தில் சுஷாந்த் புறக்கணிக்கப்பட்டார்' - அபிஷேக் கபூர் - அபிஷேக் கபூர்

கேதார்நாத் பட ரிலீஸ் சமயத்தில், சுஷாந்த் சிங் புறக்கணிக்கப்பட்டார் என்று இயக்குநர் அபிஷேக் கபூர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

By

Published : Jun 21, 2020, 6:20 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த வாரம், மன அழுத்தம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா, முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை 'கை போ சே' திரைப்படம் மூலம் பாலிவுட்டுக்கு, ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் அபிஷேக் கபூர்.

இதையடுத்து இவர் மீண்டும், சுஷாந்தை வைத்து 'கேதார்நாத்' படத்தை இயக்கினார். அதில், நடிகை சாரா அலி கான் ஹீரோயினாக அறிமுகமானதால், பலரது பார்வையும், அவர் மேல் விழுந்தது. இதனால் சுஷாந்த் மிகவும் வருத்தத்தில் இருந்ததாக அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, 'கேதார்நாத் படம் வெளியான பிறகு சுஷாந்த், 50 முறை தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டார். அவர் கடைசியாகப் பயன்படுத்தும் எண்ணைக் கண்டுபிடித்து, அவருக்கு மெசேஜ் செய்தேன்.

மீண்டும் நமது கூட்டணியில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது என்றேன். ஆனால், அதற்கு அவர் ரிப்ளை செய்யவில்லை. கால் செய்தாலும் எடுக்கவில்லை. இதுபோன்று இருக்க வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தேன். நடிகர்கள் மட்டுமின்றி, என்னைப் போன்ற இயக்குநர்களும் பல முறை இதுபோன்று புறக்கணிக்கப்பட்டு இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details