பாலிவுட்டின் அனைவருக்கும் விருப்பமான ஜோடிகளில் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் ஜோடியும் அடங்குவர். இதில் அபிஷேக் பச்சன், சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வரும் கிண்டல்களை தானே கலாய்த்து கொள்ளும் பக்குவம் வாய்ந்த நடிகராவார். இருப்பினும் தனது மகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் அளிக்க மாட்டார்.
இதற்கிடையில் சமீபத்தில் அபிஷேக் பச்சன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு மகள் பிறந்த பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், "ஆம் என் மகள் பிறந்த பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளைத் தவிர்த்தேன். என் மகள் ஒருபோதும் ஏன் அப்பா இப்படி நடித்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக மிகவும் எச்சரிக்கையுடன் கதைகளைத் தேர்வு செய்து வருகிறேன்.
இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஆனால் அவை அனைத்துமே எனக்கு பெரிய விஷயம் இல்லை. எனக்கு என் மகள் தான் உயிர்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :'போருக்குச் செல்வதைப்போல் உள்ளது' - படப்பிடிப்பில் கலந்துகொண்ட காபி நடிகை