17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவாண வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக கூட்டணிகள் 200 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால், அவர்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் சூழல் நிலவியுள்ளது.
கூடிய விரைவில் டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி கவிழும் - கவுதம் கம்பிர் டுவீட்
டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மியின் ஆட்சி தோல்வி அடையும் என இந்திய வீரர் கவுதம் கம்பிர் டுவீட் செய்துள்ளார்.
இதனிடையே, டெல்லி யூனியன் பிரதேசத்தில் 7 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவினர் ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றனர். குறிப்பாக, கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட இந்திய வீரரும், பாஜக உறுப்பினருமான கவுதம் கம்பிர் 3 லட்சத்து 36 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். "நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இன்னும் எட்டு மாதங்களில் டெல்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடையும்" என ஹிந்தி மொழியில் பதிவிட்டார்.