தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இளைஞருக்கு கத்திக் குத்து: ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! - A Youth Muder Attempt In Theni

தேனி: சின்னமனூர் அருகே இளைஞரை கத்தியால் குத்தியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Road Blocking Protest In Theni
Road Blocking Protest In Theni

By

Published : Jul 23, 2020, 6:05 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார்(21). இவர் தனது நண்பர்கள் பாலகிருஷ்ணன், அருண்குமார் ஆகியோருடன் நேற்று மாலை அவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அஜீத்குமாருடன் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், ரமேஷ் தான் வைத்திருந்த கத்தியால் அஜீத்குமாரை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு உறவினர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து, உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட ரமேஷ் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவியின் உறவினர் என்பதால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளர் ராஜேந்திரன், உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய், காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே, எரசக்கநாயக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் நிழல் உலக தலைவராக செயல்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:மதுரை ஆவின் முறைகேடு: சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details