தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேளாண்மை உணவு உற்பத்தி, மின் மானியம் வேண்டி மாநிலம் தழுவிய அளவில் நாராயணசாமி நாயுடு தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், உழவுமாடு, மாட்டு வண்டி, ஏர்கலப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் - Tanjore farmers
தஞ்சாவூர்: 1970ஆம் ஆண்டு வேளாண்மை உணவு உற்பத்தி, மின் மானிய போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 59 விவசாயிகளின் 50ஆவது நினைவு தினமான இன்று (ஜூன் 18) கும்பகோணத்தில் விவசாயிகள் மவுனம் காத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இதை எதிர்த்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர் உள்ளிட்ட 59 விவசாயிகள் உயிரிழந்தனர். இதன் 50ஆவது நினைவு தினமான இன்று (ஜூன் 18) நாகக்குடி பழவாற்றங்கரையில் ஏராளமான விவசாயிகள் தகுந்த இடைவெளியுடன் திரண்டு நின்று விவசாய போராளிகளுக்கு இரண்டு நிமிடங்கள் மவுனம் காத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் மின் திருத்த சட்டம் 2020ஐ கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆதனூர் மகாலிங்கம் தலைமையில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசின் மின் திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமின்றி 2.25 லட்சம் கைத்தறி நெசவாளர்களும், 1.5 லட்சம் ஏழை எளிய குடும்பத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.