ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு அறிவுறுத்தலின்படி அந்தந்த நிறுவனங்கள் அவர்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்றும்படி தெரிவித்திருந்தது.
இதனால் பலரும் வீட்டிலிருந்தவாறே அந்தந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே நாகை புத்தூரை சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு மடிக்கணினி இல்லாததால் அவர் பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையறிந்த நாகை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், வருமானம் இன்றி தவித்த அப்பெண்ணுக்கு உதவ முன்வந்தனர். அதன்படி அவரது பணிக்கு உதவிடும் வகையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அப்பெண்ணிடம் வழங்கி உதவினர்.