திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கிளவன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணாடி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகனான மாரியப்பன் (எ) சுதாகர் (27) கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சின்னகோனார் பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு - இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருச்சி: மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மினி வேனில் மோதி உயிரிழந்த நிலையில், மினி வேன் ஓட்டுநரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில், தொட்டியபட்டி என்ற இடத்தில் சென்றபோது மாரியப்பனின் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த மினி வேனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாரியப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளநாடு காவல் துறையினர், தப்பி ஓடிய மினி வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.