மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின் மகன் கண்ணன் (40). இவர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்வதற்காக மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்திற்குச் சென்றுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற நபருக்கு ஏற்பட்ட விபரீதம்! - மதுரையில் தற்கொலைக்கு முயன்ற நபர் மருத்துவமனையில் சேர்ப்பு
மதுரை: தற்கொலைக்கு முயன்று பாலத்தில் இருந்து குதித்த நபர் கட்டுமான கம்பிகளுக்கு இடையே சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
அதன் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கண்ணன் தற்கொலை செய்துகொள்ள பாலத்திலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் கீழே கட்டுமானப்பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டார்.
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த கண்ணனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.