தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது! - கள்ளத்தனமாக மதுபானம் விற்ற நபர் கைது

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது!
Sale liquor illegally in chennai

By

Published : Aug 4, 2020, 2:31 PM IST

சென்னை அபிராமபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 3) மாலை அபிராமபுரம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் உள்ளே ஒரு நபர் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றதைக் கண்ட காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தி நகரைச் சேர்ந்த சரவணன்(37) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த இரண்டு மாதங்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்து சட்டவிரோதமாக அபிராமபுரம், டிமாண்டிகாலனி, வாரன்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இவரிடமிருந்து சுமார் 51 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சரவணன் மீது அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details