தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாதாள சாக்கடை அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு! - A Old man dies after falling into sewer

சேலம்: பாதாள சாக்கடை அமைக்க மாநகராட்சி தோண்டிய பள்ளத்தில் முதியவர் விழுந்து உயிரிழந்தார்.

A Old man dies after falling into sewer in Salem
A Old man dies after falling into sewer in Salem

By

Published : Sep 8, 2020, 8:46 AM IST

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது .

அதன் ஒரு பகுதியாக, அப்பு செட்டி தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்பட்டு மூன்று மாதங்களாகியும் பணிகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதியினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்ற முதியவர் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, மண்சரிவு ஏற்பட்டு பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அவர் தடுமாறி விழுந்தார். பள்ளம் அதிக அளவு ஆழம் என்பதால் அவர் மேலே வரமுடியாமல் மூச்சுத் திணறி பள்ளத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை பாதாள சாக்கடை பணி மேற்கொள்ள ஊழியர்கள் வந்தபோது முதியவர் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினருக்கு மாநகராட்சி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர் .

தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் முதியவரின்‌ உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் .

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருப்பதால் இங்கு அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதம் முன்புகூட இந்தக் குழியில் விழுந்து ஒருவர் பலத்த காயம் அடைந்தார். நேற்று ஒருவர் குழியிலிருந்து உயிரிழந்துள்ளார். அப்புசாமி தெருவாசிகள் பலர் இதே போல் பள்ளத்தில் விழுந்து காயமடைந்துவருகின்றனர் .

எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், இதனைக் கவனத்தில்கொண்டு தோண்டிய பெரிய பள்ளத்தை மூடி, அப்பாவிகள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details