விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய இரு சக்கர வாகனத்தை கடைத் தெருவில் நிறுத்திவிட்டு நண்பனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமரேசனும் அவருடைய நண்பரும் விரட்டிச் சென்று முதியவரை பிடித்து விசாரித்தபோது, அவர் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த 58 வயது குருநாதன் என்பதும் மேலும் இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.