திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிப்புக்குள்ளான மகள் உள்ளார்.
இந்நிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியில் உள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகிறார்.
இதனிடையே, செல்லத்துரையின் மனநலம் பாதிப்புக்குள்ளான மகள் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, கிருமிநாசினி தெளிக்கச் சென்ற சக்திவேல், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த செல்லத்துறை வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி, சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்- காவல் ஆணையர் சுமித் சரண்!