கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணிபுரிந்துவருகிறார். அதே நிறுவனத்தில் மேலாளராக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் பணிபுரிந்துவருகிறார்.
இருவரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. காதலிக்கும்போது முகமது நபி அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகப் பலமுறை கூறியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது நபி தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவச் செலவிற்காக அந்தப் பெண்ணிடம் ஏழு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பின், முகமது நபி அப்பெண்ணுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். சில நாள்களுக்கு முன் அந்தப் பெண் முகமது நபியைத் தொடர்புகொண்டு, தன்னைத் திருணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.