கோவை மாவட்டம், சூலூர் அடுத்த குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அப்பகுதியில் குடோன் வைத்து வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை ராமசாமி தனது இருசக்கர வாகனத்தில் குடோனுக்கு சென்றுவிட்டு பணி முடிந்த பின்னர் வெளியே வந்துள்ளார்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதைக் கண்ட, அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றவர் அங்கு உள்ள நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் நண்பர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவரது பெயர் முரளி என்பதும் அவர் தற்போது வெள்ளகோவில் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.