தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ! - திருவண்ணாமலை போக்சோ சட்ட கைது

திருவண்ணாமலை: 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் படம் பிடித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

A Man Arrested For 8 Year Old Child Abusing
A Man Arrested For 8 Year Old Child Abusing

By

Published : Sep 30, 2020, 5:10 AM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் ஜாவித் என்பவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்துள்ளார். மேலும், அப்பெண்ணின் எட்டு வயது பெண் பிள்ளையை கடந்த சில மாதங்களாக பாலியல்ரீதியாகத் துன்புறுத்திவந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது அதை செல்போனில் படம் பிடித்துள்ளார் ஜாவித். இதையறிந்த சிறுமியின் தாயார் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் ஜாவித் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போனைக் கைப்பற்றி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details