தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இரவு வரை நீடித்த பெண் சத்துணவு அமைப்பாளரின் தர்ணா போராட்டம்! - தர்ணா போராட்டம்

பெரம்பலூர் : ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியிட மாறுதல் வேண்டி சத்துணவு அமைப்பாளர் சவிதா தொடங்கிய தர்ணா போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

A Lady Dharna Protest In Perambalur
A Lady Dharna Protest In Perambalur

By

Published : Sep 23, 2020, 4:04 AM IST

பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் சவிதா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் சொந்த ஊரான இரூருக்கு மாறுதல் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக நேற்று முன் தினம் (செப்.21) மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சவிதாவை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மீட்டனர்.

இதையடுத்து, நேற்று (செப்.22) காலை பணிமாறுதல் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சவிதாவை அலுவலர்கள் மீண்டும் அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய அலுவலர்கள் எந்தவித பதிலும் சொல்லாமல் சென்று விட்டனர்.

இந்நிலையில், பூட்டிய அலுவலகம் முன்பு நேற்று இரவு வரை சவிதா தனது தர்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details