தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடிநீர் தொட்டியிலிருந்து குதித்து பட்டதாரி இளைஞர் தற்கொலை - வாலிபர் தற்கொலை

தேனி: 75 அடி உயர குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து குதித்து பொறியியல் பட்டதாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

குடிநீர் தொட்டியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி வாலிபர்
குடிநீர் தொட்டியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி வாலிபர்

By

Published : Jun 8, 2020, 5:30 PM IST

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்தவர் அசோக் (29). இவரது ஏழு வயதிலேயே தாய் - தந்தையர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்டனர். கம்பத்தில் உள்ள பாட்டியான பசுமதி என்பவர் அசோக்கை சிறுவயதிலிருந்து வளர்த்து வந்துள்ளளார். இதனையடுத்து பொறியியல் படித்து முடித்தவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அசோக், இன்று கம்பம் வாரச்சந்தை அருகே உள்ள 75 அடி உயர குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கம்பம் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details