தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை, மகன்: உடல்களை மீட்டு வர ஆட்சியரிடம் மனு! - A Members Petition To Collector In Perambalur

பெரம்பலூர்: வெளிநாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களையும் விரைவாக மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

A Members Petition To Collector In Perambalur
A Members Petition To Collector In Perambalur

By

Published : Aug 2, 2020, 11:32 PM IST

பெரம்பலூர் மாவட்டம் கோனேரி பாளையம் கிராமம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57). இவர் குவைத் நாட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக அங்குள்ள வாப்ரா என்ற பகுதியில் தோட்ட வேலை செய்து வந்தார்.

அதேபோல், இவருடைய மகன் ரகுநாத் (25) கடந்த இரண்டு வருடங்களாக குவைத் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஷாப்பிங் மாலில் வேலை செய்து வந்தார். இதனிடையே, கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத காரணத்தினால் ரகுநாதன் தந்தையோடு வசித்துவந்தார்.

இந்நிலையில், மர்மமான முறையில் தந்தை, மகன் ஆகிய இருவரும் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, அங்கு வேலை பார்க்கும் நண்பர்கள் நேற்று இரவு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடற்கூறாய்விற்குப் பிறகுதான் இருவரும் எப்படி உயிரிழந்தார்கள் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, உயிரிழந்த தந்தை, மகன் உடலை விரைவாக மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details