தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடிபோதையில் மாமியாரை கொலை செய்த மருமகன் - Mother in law murdered

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே குடிபோதையில் மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகனை காவல்து றையினர் கைது செய்தனர்.

குடிபோதையில் மாமியாரை வெட்டி படுகொலை செய்த மருமகன்
குடிபோதையில் மாமியாரை வெட்டி படுகொலை செய்த மருமகன்

By

Published : Jun 12, 2020, 1:21 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மீனாம்பாள் (70). இவரது கணவர் இறந்துவிட்டார், இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கடைசி மகள் விமலா என்பவரை பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தியை சேர்ந்த துரைராஜ் (35)என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

பேராவூரணியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்துவந்த துரைராஜ் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள துரைராஜ், செவ்வாய் கிழமை இரவு குடி போதையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை மாமியார் கண்டித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ் அரிவாளால் மீனாம்பாளை பல்வேறு இடங்களில் வெட்டியதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details