களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விளைநிலங்களையும் வீட்டு விலங்குகளையும் தாக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.
அதேசமயம், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் உள்ள மா, பலா, தென்னை உள்ளிட்ட பயிர்களை மிகவும் சேதப்படுத்தி வந்தன. இதுகுறித்து வனத்துறைக்கு புகார் வந்ததையடுத்து பல்வேறு இடங்களில் கண்காணித்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர்.