கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அருகேயுள்ள ராஜேஷ்வரி லே அவுட் பகுதியில் சாலையோரமாக உள்ள புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்ததில் பச்சிளம் ஆண்குழந்தை இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு, பச்சிளம் குழந்தை தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை! - Hosur sipcot
கிருஷ்ணகிரி: ஓசூரில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தை சாலையோர புதரில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமேயான குழந்தைக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மார்பு உள்ளிட்டப் பகுதிகளில் கீறல் ஏற்பட்டு, மூக்கில் தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்து வருவதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் திருமணத்தைத் தாண்டிய உறவினால் பிறந்ததால் இக்குழந்தையை வீசி சென்றனரா? குழந்தையைப் புதரில் வீசிச் சென்றவர்கள் யார்? என்கிற கோணத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.