தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தஞ்சாவூரில் மேலும் 88 பேருக்கு கரோனா உறுதி!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

88 Corona Positive cases In Thanjavur
88 Corona Positive cases In Thanjavur

By

Published : Aug 14, 2020, 10:48 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 652 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். அதில், 3 ஆயிரத்து 559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 1093 பேர் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details