இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரிலிருந்து 204 இந்தியா்களுடன் ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று (ஜூலை 10) இரவு சென்னை வந்தது. அவா்களில் ஆண்கள் 101, பெண்கள் 66, சிறுவா்கள் 34, குழந்தைகள் மூவர் ஆவர். இவா்களை சென்னை விமான நிலையத்தில் அரசு அலுவலர்கள் வரவேற்று மருத்துவ பரிசோதனைகள் நடத்தினா். பின்னர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 4 போ் மட்டும் இலவச தங்குமிடங்களான தண்டலம் தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனா். 200 போ் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனா்.
சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 175 இந்தியா்கள் தனியாா் சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னை வந்தனா். இவா்கள் அனைவரும் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள். அந்த நிறுவனமே சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானத்தில் இந்தியா்களை அழைத்து வந்திருந்தது. இதையடுத்து அனைவரும் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனா்.