தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருப்பூரில் எட்டு வயது சிறுவன் கொடூரக் கொலை - 8 Year Child Muder

திருப்பூர்: எட்டு வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 Year Child Murder In Tiruppur
8 Year Child Murder In Tiruppur

By

Published : Jun 12, 2020, 6:01 PM IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கராஜ் - சுமதி தம்பதி. இவர்களுக்கு விக்னேஷ் (9), பவனேஷ் (8) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த தம்பதி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றால் மாலைதான் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பெற்றோர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், பணி முடித்து வந்த தங்கராஜ் நேற்று இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, இன்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்குச் சென்றவர்கள் அங்கு பவனேஷ் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு ஊத்துக்குளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகக் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன பவனேஷ் தான் வயிறு, கழுத்து பகுதிகளில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இக்கொலை சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details