தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர்- உச்சிமாகாளி தம்பதியின் 7 வயது மகள் நேற்று ஊருக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டார்.
அடையாளம் தெரியாத நபர்கள் அவரது உடலை தண்ணீர் நிரப்பும் டிரம்மில் வைத்து பாலத்திற்கு அடியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரர், நந்தீஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதற்கிடையில், சிறுமியின் உடல் உடற்கூறாய்விற்காக திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கனவே அங்கு பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த உடல்கள் உடற்கூறாய்விற்கு வைக்கப்பட்டிருந்ததால் தாமதமாக அதாவது இன்று மாலை 5 மணியளவில் சிறுமியுடன் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உயிரிழந்த சிறுமி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசிகவினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.