திருச்சி மாநகரில் காவல் துறை சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்கிய சாலைகள் திருச்சி மாநகர கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர தனியார் வைத்துள்ள சிசிடிவி கேமராக்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
69 சிசிடிவி கேமராக்களை தொடங்கிவைத்த எம்பி திருநாவுக்கரசர் - நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்
திருச்சி: தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 சிசிடிவி கேமராக்களை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார்.
இந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 சிசிடிவி கேமராக்கள் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கொண்டையன் பேட்டை, உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிசிடிவி கேமராக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ, துணை ஆணையர் நிஷா மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.