கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பீர் பாஷா(66). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் "எனக்கு உன்னை பிடித்திருக்கு உனக்கு ஓகே வா" என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் முதியவரை கண்டித்துள்ளனர்.
ஆனால், அந்த முதியவர் மீண்டும் சிறுமியிடம் காதல் கண்ணோட்டத்தில் வம்பிழுத்துள்ளார். இது குறித்து மீண்டும் அந்தச் சிறுமி தனது வீட்டாரிடம் தெரிவித்தார்.