தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'கரோனா தடுப்புப் பணிகளுக்காக 65 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன' - திருச்சி மாநகரக் காவல் ஆணையர்

திருச்சி: கரோனா தடுப்புப் பணிகளுக்காக 65 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் கூறியுள்ளார்.

கரோனா  தடுப்பு பணிகளுக்காக 65 குழுக்கள் அமைக்கப்படும் - மாநகர காவல் ஆணையர்
கரோனா தடுப்பு பணிகளுக்காக 65 குழுக்கள் அமைக்கப்படும் - மாநகர காவல் ஆணையர்

By

Published : Jul 5, 2020, 9:55 AM IST

2019-2020ஆம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தின் கீழ், திருச்சி மாநகரக் காவல் ஆயுதப்படை வளாகத்தில்,11.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னொளி கைப்பந்து மைதானம், 4.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னொளி கடற்கரை கைப்பந்து மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம் செல்லும் சாலையில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சாலை ரவுண்டானா ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு கட்டடங்களைத் திறந்துவைத்தனர். இவ்விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், டிஐஜி ஆனி விஜயா, துணை ஆணையர்கள் நிஷா, வேதரத்தினம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன், ”கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய், காவல், சுகாதார, மாநகராட்சி ஆகிய நான்கு துறைகளைச் சேர்ந்த தலா 10 பேர் அடங்கிய 65 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்துதல், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், காவல் துறையினருக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த காவலர்களுக்கு ஆலோசனைகளும், மக்களுடன் நட்புறவு பாராட்டாத காவலர்களுக்கு தனியே பயிற்சிகள் நடத்தி, மக்களுடன் இணைந்து பணியாற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கோபப்பட்டு, சரிவர தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாத 25 காவலர்கள் அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களுடன் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு சானிடைசர்கள் வழங்கப்பட்டுவருகின்றன. பணியிலிருக்கும் காவலர்கள் முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details