கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது.
ஏற்கனவே ராயபுரம் தண்டையார்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது தேனாம்பேட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரமாக அதிகரித்துள்ளது.
15 மண்டலங்களில் ராயபுரத்தில் அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கை கொண்டது தேனாம்பேட்டை. இந்தப் பரவலைத் தடுக்க தேனாம்பேட்டையில் மாநகராட்சி சார்பில் அதிக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் 15 மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
ராயபுரம் - 7659 நபர்கள்
தண்டையார்பேட்டை - 6393 நபர்கள்
தேனாம்பேட்டை - 6033 நபர்கள்
கோடம்பாக்கம் - 5578 நபர்கள்
அண்ணா நகர் - 5740 நபர்கள்