தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வரும் அசோக்குமார் (45), தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நடுப்படுகை மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார். மதியம் சுமார் 1 மணியளவில் அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு நடுப்படுகையில் ஒரு வீட்டில் துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளார். மூன்று மணிக்கு திரும்பி வந்து அவர் பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
பூட்டியிருந்த வீட்டில் 6 சவரன் தங்கநகை திருட்டு
தஞ்சாவூர்: திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 6 சவரன் தங்க நகை, 63 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 சவரன் தங்க நகை, 63 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர் திருவையாறு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
தஞ்சையிலிருந்து தடயவியல் உதவி இயக்குநர் ராமச்சந்திரன் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது சம்பந்தமாக திருவையாறு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.