திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள சாயர் பஜாஜ் மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஆறு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த கம்பெனி மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 6 பேருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சாயர் பஜாஜ் மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கம்பெனிக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் சர்வீஸ் செய்து கொள்ள, பழுது பார்க்க வந்தவர்கள், வேலை நிமித்தமாக வந்தவர்கள் என யார் யாரெல்லாம் உள்ளே வந்தார்களோ அவர்களை கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கம்பெனியில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆறு பேருக்கு ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.