இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையடுத்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட், மூன்று டி20 தொடர்கள் நடக்கவுள்ளன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடக்கவுள்ள இந்தத் தொடருக்காக பாகிஸ்தான் அணி சார்பாக வீரர்கள், ஊழியர்கள் உள்பட 31 பேரை பாகிஸ்தான் குழு தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஜூன் 28ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட தயாராக இருந்தது. இதையொட்டி தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் நிர்வாகம், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்து, இங்கிலாந்து அனுப்பி வைத்தது.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்டிருந்த வீரர்களுக்கு மீண்டும் நேற்று (ஜூன் 29) கரோனா கண்டறிதல் சோதனைகளை வாரியம் மேற்கொண்டதில், பாகர் ஜமான், முகமது ஹஸ்னைன், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், வஹாப் ரியாஸ் ஆகிய ஆறு பேருக்கு கோவிட்-19 தொற்று நேர்மறையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இப்போது சேர தகுதி பெற்ற இந்த ஆறு பேரையும் இங்கிலாந்து போட்டியில் களமிறக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.